தேவனே நான் உமதண்டையில் | Devanae Naan Umathandayil
LYRICS: தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்; தேவனே நான் உமதண்டையில்... இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்... யாக்கோபைப் போல் போகும் பாதையில் பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட; தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா வல்ல நாதா — தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். பரத்திற்கேறும் படிகள் போலவே என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா என்றன் தேவனே... கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை அருமையாக என்னை அழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் — தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன். தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்; இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்!!!