Kaatupuravin Satham
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2
1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
-----உம்வருகை
2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
-----உம் வருகைவரை
3)பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
-----உம் வருகைவரை