எங்கே போகிறாய் தோழா | Enge Pogirai Thozha

Category: Songs

Duration: 6m

LYRICS: எங்கே போகிறாய்? தோழா, எங்கே போகிறாய்? பாரம் சுமந்து சுமந்து நீயும் எங்கே போகிறாய்? உடலை வருத்தி உள்ளம் நொந்து எங்கே போகிறாய்? - உன் உடலை வருத்தி உள்ளம் நொந்து எங்கே போகிறாய்? தோழா, எங்கே போகிறாய்? நீயும் எங்கே போகிறாய்! நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் - உன் பாரமெல்லாம் நீங்கி இளைப்பாருதல் தருவார். வா வா தோழா! இயேசுவண்டை வா!! வா வா தோழா! இயேசுவண்டை வா!! உன்னைத்தான் அழைக்கிறார்! இயேசுவண்டை வா.. அவர் உன்னைத்தான் அழைக்கிறார்; இயேசுவண்டை வா. இயேசுவண்டை வா. இயேசுவண்டை வா. தோஷங்கள் யாவும் போக்கிடுவார் தோழா. காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் தோழா. தரித்திரம் வருமை நீக்கிடுவார் தோழா . செல்வச் செழிப்பும் தந்திடுவார் தோழா. தோழா தோழா என் தோழா! தோழா தோழா என் தோழா!! நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் - உன் பாரமெல்லாம் நீங்கி இளைப்பாருதல் தருவார். பாவங்கள் சாபங்கள் போக்குடுவார் தோழா. பரவசவாழ்வதனைத் தந்திடுவார் தோழா. சாவின் பயம்தனை நீக்கிடுவார். சாகா வரம்தனை தந்திடுவார் தோழா. தோழா தோழா என் தோழா.. தோழா தோழா என் தோழா. நீ தேடும் நிம்மதி.நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் - உன் பாரமெல்லாம் நீங்கி இளைப்பாருதல் தருவார். இளைப்பாருதல் தருவார். Video Production, Lyrics and Music Composition by Jesus Redeems Ministries.
Loading