Kadaisi Varai Yaro
மனிதனாய் பிறந்த எல்லாருக்கும் ஒரு நாளில் மரணம் நேரிடும்.எந்த நேரத்திலும்,
எந்த இடத்திலும், எந்த வயதிலும் மரணம் நம்மை சந்திக்க நேரிடும். மரணத்தை
சந்திக்க நீங்கள் ஆயத்தமா?நாம் மெய்யான தேவனை ஏற்றுக் கொண்டு அவருடைய
பிள்ளையாய் பரிசுத்தமாக வாழ்ந்தால்,என்னை விசுவாசித்தவர்கள் மரித்தாலும்
பிழைப்பார்கள் என்று தேவனுடைய வார்த்தையின் படி நாம் மரித்தாலும் கர்த்தருக்குள்
பிழைப்போம்.மரணத்துக்கு பிறகு ஒரு வாழ்க்கை இருப்பதை அறிந்தால், நாமும்
மரணத்தை தைரியமாக சந்திக்கலாம். கடைசிவரை இயேசுவையே நம்புவோம்.