என் மீட்பர் உயிரோடிருக்கையிலே | En Meetpar Uyirodirukayile

Category: Songs

Duration: 5m

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமேஎன்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர்உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும்பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்பரமபதவியினுள் என்றனை எடுப்பார்Lyrics : Late Bro. N. Samuel of Tranquebar Tune composed by : Late. Bro. Gnana Bhaktamitran
Loading